பாராளுமன்றத்தில் சஜித்திற்கு பிஸ்கட் கொடுத்த சுகாதார அமைச்சர்!

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் சஜித்திற்கு பிஸ்கட் கொடுத்த சுகாதார அமைச்சர்!

திரிபோஷா நிறுவனத்தால் குழந்தைகளுக்காக தயாரித்த பிஸ்கெட் மூன்றை பாராளுமன்றத்தின் சபைக்குள் புதன்கிழமை (04) கொண்டுவந்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இந்த பிஸ்கட்டுகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்குவதாக தெரிவித்து, படைகல உதவியாளர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

 அந்த மூன்று பிஸ்கட் பெக்கட்டுகளையும் சபைக்கு காண்பித்த அவர், “ திரிபோஷா நிறுவனம் மூடிவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் இதற்கு முன்னர் சபையில் தெரிவித்திருந்தார். 

அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை. அந்த தொழிற்சாலை இயங்குகின்றது. இந்தா பாருங்கள் அந்த நிறுவனத்தால் பிள்ளைகளுக்கு பிஸ்கட் தயாரிக்கின்றனர். நீங்கள் குழந்தையாக இல்லாவிட்டாலும் உங்களுக்கு மூன்று பக்கெட்டுகளை தருகின்றேன் என சிரித்துக்கொண்டே கூறினார்.

 கையிலிருந்து மூன்று பக்கெட்டு பிஸ்கட்டுகளை தூக்கி காண்பித்த அமைச்சர் கெஹலிய, திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டதாக நீங்கள் தெரிவித்திருந்தமை தவறானது என்றார்.

 நீங்கள் குழந்தை இல்லாவிட்டாலும் இந்த மூன்று பக்கட்டுகளையும் நான் உங்களுக்குத் தருகின்றேன். உங்களுக்கும் சாப்பிட முடியும். சாப்பிட்டு பாருங்கள், நல்ல ருசியாக இருக்கின்றது. 

இது இப்போது சந்தைகளில் இருக்கின்றது. இந்த பிஸ்கட்டுகள் நாளொன்றுக்கு 10 ஆயிரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. எவ்விதமான குறைகளும் இல்லை என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4