நாள் முழுவதும் பதில் சொல்ல தயார்! பிரதமர் தினேஷ் குணவர்தன
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் நாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் புத்திக பத்திரன வினவியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கட்சித் தலைமைக் குழுக் கூட்டம் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
நிலையியற் கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைமைக் குழு தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.