ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நிதி நெருக்கடியில்: முதல் காலாண்டில் ரூ.35.6 பில்லியன் இழப்பு!

#SriLanka #LANKA4 #AirCraft #Airlines
Abi
20 minutes ago
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நிதி நெருக்கடியில்: முதல் காலாண்டில் ரூ.35.6 பில்லியன் இழப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியான நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் ரூ.35.6 பில்லியன் (3,560 கோடி ரூபாய்) வரிக்கு முந்தைய இழப்பைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சின் இடைக்கால நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை அதிகரிப்பு, இயக்கச் செலவுகள், விமானப் பராமரிப்புச் செலவுகள், வெளிநாட்டுச் செலாவணி இழப்புகள் மற்றும் கடன் சேவைக் கட்டணங்கள் அதிகரித்தமை ஆகியவை இந்த நிதி இழப்புக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வருவாய் அதிகரித்தும் இழப்பு தொடர்கிறது! நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.62.6 பில்லியனாக இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ.82.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

இருப்பினும், அதிகரித்த செலவுகள் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைமை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.561.4 பில்லியனாக உயர்ந்துள்ள கடன் மற்றும் பொறுப்புகள்! ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ரூ.3.4 பில்லியன் நிகர லாபத்தைப் பதிவு செய்ததன் மூலம், ஒட்டுமொத்த குழுமத்தின் நிகர இழப்பு ரூ.32.2 பில்லியனாகக் குறைந்துள்ளது.

எனினும், 2026 ஜூன் மாத நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.209.9 பில்லியனாக இருக்கையில், மொத்தக் கடன்கள் மற்றும் பொறுப்புகள் ரூ.561.4 பில்லியனாக உயர்ந்துள்ளன. 

இதனால் நிறுவனத்தின் மூலதன நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு! மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, சுத்திகரிப்பு நிலையங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதால் விமான எரிபொருள் விநியோகம் குறைந்து, அதன் விலையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் நிதி உதவி! இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த காலங்களில் அரசாங்கம் தலையிட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அரசாங்கம் விடுவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!