அமெரிக்காவில் மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

#Student #Accident #America #Bus #New Year
அமெரிக்காவில் மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் உயர்நிலைப் பள்ளி இசைக்குழு மாணவர்களை ஏற்றுச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்தில் 40 பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 43 வயதான கினா பலேட்டியர் என்ற நபரும், 77 வயதான பீட்ரைஸ் பெர்ராரி என்ற நபரும் உயிரிழந்தனர். மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். 

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நியூயார்க் மாநில காவல்துறையின் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் எல் மஸ்ஸோன்," முதற்கட்ட தகவல்படி முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது என்றார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு