வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்
#India
#PrimeMinister
#Minister
#India Cricket
#sports
#2023
#Tamilnews
#NarendraModi
Mani
2 years ago

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் வருகிற 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த மைதானம் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இந்த மைதானம் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.



