இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை சடுதியாக அதிகரிப்பு

#SriLanka #prices #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்றைய தினத்தில் 2000 கிலோகிராம் தேசிக்காய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4