ஆறு மாதங்களில் 4000 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

#SriLanka #doctor #taxes
Prathees
2 years ago
ஆறு மாதங்களில் 4000 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

நியாயமற்ற வரிக் கொள்கைகளால் இந்த வருடத்தின் (2023) முதல் 6 மாதங்களில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட ஏறக்குறைய நான்காயிரம் தொழில் வல்லுநர்கள் வெளியேறியுள்ளதாக சுதந்திர தேசிய சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். 

 அந்தக் குழுவில் சுமார் 800 மருத்துவர்கள், 300 விசேட மருத்துவர்கள், 1000 பொறியாளர்கள், 500 பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

 வரி விதிப்பு நியாயமற்றதாக இருக்கும் போது, ​​மக்களும் வர்த்தகர்களும் வரி செலுத்துவதில்லை எனவும், வரி செலுத்தும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும், வர்த்தகர்கள் தமது வர்த்தகங்களை மூடுவதும் என நாலக கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருவாயில் 77 சதவீதத்தை வசூலிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4