நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று

#SriLanka #Parliament #Keheliya Rambukwella #Lanka4 #Health Department
Kanimoli
2 years ago
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.

 பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் அது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சுகாதார அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்டது. இதேவேளை, நேற்றைய தினம் விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, 

சுகாதார நெருக்கடியை மூடிமறைக்க நடவடிக்கை எடுக்கும் ஒவ்வொரு அரச அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!