பிரேசிலை புரட்டிப் போட்ட புயல்: 21 பேர் உயிரிழப்பு 60 நகரங்கள் பாதிப்பு

#India #Death #people #world_news #2023 #Tamilnews #Strom #Died #ImportantNews #Injury
Mani
2 years ago
பிரேசிலை புரட்டிப் போட்ட புயல்: 21 பேர் உயிரிழப்பு 60 நகரங்கள் பாதிப்பு

பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்தது, 60 நகரங்கள் வரை பாதிக்கப்பட்டன. மேலும், ஏறத்தாழ 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்

ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் பருவநிலை மாற்றத்தால் மாநிலத்தில் உயிர் இழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறினார். இந்த புயல் 60 நகரங்களை பாதித்துள்ளது. இது வெப்பம் மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் மீட்பு பணியின்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். கயிறு கட்டி அந்த பெண்ணை மீட்டபோது, கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற முடியவில்லை என்றார்.

ரியா கிராண்ட் டோ சுல் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் மொட்டை மாடியில் இருந்து உதவிக்கு அழைக்கும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் ஜூன் மாதம் இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4