முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது!
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை, முறைகேடான வழிகளில் இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக இணைத்துக் கொண்டமை மற்றும் அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தி அவரை பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்தமை ஆகிய பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஊழல் மோசடி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கடந்த ஜூன் மாதம் 16 மற்றும் 22ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொடவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்தத் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியிருந்த நிலையிலேயே இன்றைய தினம் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்..
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே