சிறுவயதிலேயே பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்

#Temple #children #Lifestyle #Lanka4
Mugunthan Mugunthan
9 months ago
சிறுவயதிலேயே பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்

நமது குழந்தையின் ஏழு வயதுக்குள் அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;

சனி,ஞாயிறு,அரசு விடுமுறைகள்,உள்ளூர் விடுமுறைகளில் தொடர்ந்து நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் வரலாற்றையும்,வழிபடும் முறையையும் சொல்லித் தர வேண்டும்; இப்படிச் சொல்வதை எப்படி ஏழுக்குட்பட்ட வயதுடைய குழந்தை புரிந்துகொள்ளும்? 

நமது புரிந்துகொள்ளும் திறனை விடவும் அதற்கு புரிந்து கொள்ளும் திறன் அதிகம்;(அது புரிந்து கொண்டதை நம்மால் அதன் டீன் ஏஜில் தான் அறிந்து கொள்ளவே முடியும்) முடிந்தவரையிலும் எளிய தமிழில் சொல்லி விளக்கினால் போதும்;

அது கேட்கும் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிப் பழக வேண்டும்;அது கேட்கும் கேள்விகள் நமது ஆன்மீக அறிவை விசாலமாக்கிவிடும்!!!