சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா?

#India #Lanka4 #rajini kanth
Dhushanthini K
2 years ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா?

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி தற்போது இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  சகோதரர் சத்தியநாராயண ராவ் இன்று (03.09)  மதுரையில் எழுந்தருளியுள்ள  மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

 இந்நிலையில் இதன்போது  செய்தியாளர்கள் அவரிடம்  'ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சத்யநாராயண ராவ், 'எல்லாம் இறைவனின் கையில் தான் இருக்கிறது' என்று கூறினார்.

 சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பி வரும் வழியில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,  ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உட்பட சில அரசியல் தலைவர்களை சந்தித்தார். 

மேலும் நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்தை சந்தித்திருந்தார். இப்படி அரசியல் தலைவர்களை அவர் சந்திப்பது ரஜினிகாந்த் அரசியலுக்குள் வரப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!