காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக் குறைவால் காலமானார்
#India
#Cinema
#2023
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி 67, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கமல் உடன், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, உன்னைப் போல் ஒருவன்" என பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக நேற்றுமுன்தினம் வெளியான யோகிபாபுவின் லக்கிமேன் படத்தில் நடித்தார்.
இவரது தந்தை பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர். சந்தானம் ஆவார்.
இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதி இவரது சகோதரர்.
சிவாஜியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



