பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

#Death #Pakistan #2023 #Tamilnews #Breakingnews #Killed
Mani
2 years ago
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பயங்கரவாத ஒழிப்பு துறை கடந்த வாரத்தில் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

இதையடுத்து 49 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு பயங்கரமான மற்றும் ஆபத்தான திட்டத்தை வகுத்துள்ளனர் என்பதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.

அவர்களது பதுங்கு குழியில் இருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில் நடந்த நேரடி மோதலின் போது நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள லக்கி மர்வாத் நகரில் நடந்த மற்றொரு என்கவுண்ட்டர் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகவும் தேடப்படும் நபராக கருதப்பட்ட ஷகர் தின் என்ற உமர் காலித் என்பவரும் ஒருவர். இந்த விசாரணையில், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் விசாரணைக்கு நடத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4