‘இறுகப்பற்று’ முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்ரம் பிரபு
#Cinema
#TamilCinema
#release
#2023
#trailer
#Tamilnews
#Movie
Mani
2 years ago

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, விதார்த் நடித்துள்ள படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'இறுகப்பற்று' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நாளை (ஆகஸ்ட் 31) மாலை 5 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போஸ்டரை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



