ஜெயிலர் படத்தின் HD ப்ரிண்ட் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

#India #Cinema #Actor #TamilCinema #Tamil People #Director #2023 #Tamilnews #rajini kanth
Mani
2 years ago
ஜெயிலர் படத்தின் HD ப்ரிண்ட் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இன்றுவரை இப்படம் 525 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஜெயிலர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் ஹெச்.டி. ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படம், வெளியான ரிலீசான சிறிது நாட்களிலேயே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!