'கதர் 2' திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலைத் தாண்டியது

#India #Cinema #TamilCinema #Collection #2023 #budget #Movie
Mani
2 years ago
'கதர் 2' திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலைத் தாண்டியது

பாலிவுட் திரையுலகில் கடந்த 2001ஆம் ஆண்டு சன்னி தியோல் மற்றும் அமீஷா படேல் ஆகிய இருவரின் நடிப்பில் வெளியான திரைப்படம், “கதர்: ஏக் பிரேம் கதா”. இந்த -படம் வெற்றி பெற்றதை அடுத்து இதன் தொடர்ச்சியாக ‘கதர் 2’ படம் எடுக்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்த படம் வெளியாகி 17 நாட்களை கடந்த நிலையில் தற்போது ரூ.450 கோடி வசூல் செய்துள்ளது.இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வேகமாக ரூ.450 கோடி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த செய்தியை அந்த படத் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த படத்தின் கதைக்களம் 1971 ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் “கதர் 2”, தாரா சிங் (சன்னி தியோல்) அவரது மகன் சரண்ஜீத் சிங்கை (உத்கர்ஷ் ஷர்மா) பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து மீட்பதற்காக பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் குறித்த கதையம்சம் கொண்டதாகும். இதில் அமீஷா படேல், மனிஷ் வாத்வா மற்றும் கௌரவ் சோப்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!