பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை

#France #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ்
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை

நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, பரிஸ் புறநகரங்களில் இரவு நேர நடவடிக்கைகள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. 'டைகர்' நுளம்பு என அழைக்கபடும் ஆபத்தான நுளம்புகளினால் டெங்கு, சிக்கன்குன்யா, சிகா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றது. 

புறநகர் பரிசான Place de la Liberation (Saint-Mandé) இல் இந்த நுளம்புகளுக்கு எதிராக பூச்சிகொல்லி மருத்து அடிக்கும் பணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் வீதிகள் முழுவதும் இரவு நேரத்தில் இந்த பூச்சிகொல்லி மருந்து அடிக்கப்பட்டு உள்ளது. 

நேற்று வியாழக்கிழமை இரவு முதற்கட்டமாக இப்படி இடம்பெற்றது. இதற்காக அப்பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து தடைப்பட்டதாக அறிய முடிகிறது.