மாவீரன் பண்டார வன்னியனின் வெற்றி நினைவு நாள் நினைவுகூரல்!

#SriLanka #Mullaitivu
Mayoorikka
2 years ago
மாவீரன் பண்டார வன்னியனின் வெற்றி நினைவு  நாள்  நினைவுகூரல்!

முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு நிகழ்வில் முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரப்பட்டது.

 இதில் வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீசன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான கி.சிவகுரு, இ.ஜெரோன்சன், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

 முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக, இன்றையநாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!