வாசனா மற்றும் குழந்தையை கொலை செய்த சந்தேக நபரின் சடலம் சிறையில் மீட்பு

#SriLanka #Suicide #Prison
Prathees
2 years ago
வாசனா மற்றும் குழந்தையை கொலை  செய்த சந்தேக நபரின் சடலம் சிறையில் மீட்பு

அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தையொன்றை படுகொலை செய்த சந்தேகநபரின் சடலம் சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் என்ற சந்தேக நபரின் சடலம் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 வரகாகொட சல்காஸ் வத்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அகுருவாதோட்டை ஊருதுடாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத குழந்தையான தஸ்மி திலன்யா ஆகியோரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அகுருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே சந்தேக நபரின் சடலம் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!