ஆசிரியர் சேவையில் சம்பளத் தர வேறுபாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

#SriLanka #Lanka4 #Ministry of Education #students
Kanimoli
2 years ago
ஆசிரியர் சேவையில் சம்பளத் தர வேறுபாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்திற்கும் வழங்கப்படும் சம்பளத் தரத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

 அதற்கமைய, இந்த சிக்கலுக்குத் தீர்வு வழங்கும் வரை நியமனங்களை தற்காலிகமாக பிற்போட வேண்டும் என குழுவின் கருத்தாக இருந்ததுடன், தமது சேவைக் காலத்தில் ஆலோசகர் ஒருவராக உள்ளீர்க்கப்படும் போது முன்னர் கிடைத்த சம்பளத்துக்குக் குறைவான சம்பளம் வழங்குவது நியாயமில்லை என குழு குழுவின் கருத்தாக இருந்தது.

 அத்துடன், பாலர் படசலைகளின் செயல்பாடுகள் மற்றும் பாலர் பாடசாலைக் கல்வியை எவ்வாறு முறைப்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாலர் பாடசாலைக் கல்விக்கான தேசியக் கொள்கையை சுமார் ஒரு மாத காலம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!