ரத்தோட்ட சம்பவத்திற்கு பின்னால் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ரத்தோட்ட சம்பவத்திற்கு பின்னால் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

மாத்தளை ரத்தோட்ட தோட்டத்தில் இடம்பெற்ற சம்வம் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது எனவும் இந்த சம்பத்தின் பின்னணியில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் இருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (22.08) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், மேற்படி சம்பவத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

அந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். சபாநாயகர் கூறுவது போல் நாட்டின் பல இடங்களிலும் அதிகாரிகளின் இது போன்ற முறையற்ற வகையில் செயல்படுவதால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.  

அதனை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்ய முற்படக் கூடாது. அது தவறு. அத்துடன் மாத்தளை ரத்தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவ இடத்திற்கு சென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தார். இது எதிர்க்கட்சியினருக்கு பொறுக்கவில்லை” எனக் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!