இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

#SriLanka #Lanka4 #Jewelry #Jewel
Kanimoli
2 years ago
இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையானது 34% ஏற்றுமதி வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்கும் டொலர்கள் உண்மையில் இலங்கைக்கு வருகின்றதா? என்று பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறு கிடைக்க வேண்டிய வருமானம் உண்டியல் போன்ற பணப்பறிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்காமல் போனது. 

எனவே இவற்றைத் தடுத்து நமது ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய டொலர்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் புதிய சுங்க அனுமதிப் பொறிமுறையொன்றை செயற்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரத்தினக்கல் தொடர்பான முழு விபரங்களை பெற்று, அதன் வருமானம் மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!