இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நிதி மோசடி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி நிதி மோசடி!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக கூறி 160 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

சந்தேக நபர் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாக கூறியதாகவும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து உரிய தொகையை பெற்றுக்கொண்ட பின்னர் உரங்களை இறக்குமதி செய்யாமல் பெறுமதியான காசோலைகளை வழங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தேகநபர் இன்று (22.08) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!