தொலைபேசி கம்பத்தில் மோதி எரிந்து சாம்பலான கார்

#Accident
Prathees
2 years ago
தொலைபேசி கம்பத்தில் மோதி எரிந்து சாம்பலான கார்

எல்பிட்டிய மாபலகம வீதியின் அட்கந்துர ஏரி சுற்றுவட்டத்தில் கார் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதியதில் கார் முற்றாக எரிந்து நாசமானது.

 நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 விபத்தின் போது காரில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன் எல்பிட்டியவில் இருந்து அட்கந்துர பகுதிக்கு கார் சென்று கொண்டிருந்தது.

 காரில் பயணம் செய்த 3 பேர் உடனடியாக காரில் இருந்து குதித்து உயிரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

 காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, கார் மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!