ரஷ்யாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எம்.எஸ்.-24 விண்கலம் செல்ல திட்டமிட்டுள்ளது

#world_news #Russia #Breakingnews #Space
Mani
2 years ago
ரஷ்யாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எம்.எஸ்.-24 விண்கலம் செல்ல திட்டமிட்டுள்ளது

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு இங்கிருந்து எரிபொருள், தண்ணீர் போன்றவை அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் ரஷியாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புரோக்ரஸ் எம்.எஸ்-24 என்ற விண்கலத்தை அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது. இதற்காக சோயுஸ்-2.1ஏ ராக்கெட்டை நாளை (புதன்கிழமை) பைகோனூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுமார் 2,500 கிலோ சரக்குகளை கொண்டு செல்கிறது. இதில் விண்வெளி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு 500 கிலோ எரிபொருள், விண்வெளி வீரர்களுக்கு 420 கிலோ தண்ணீர், உணவு மற்றும் உடைகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இதை விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் பணி வரும் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4