கொடுத்த கடனை மீண்டும் கேட்டதால் நடந்த விபரீதம் - ஒருவர் படுகொலை!

#SriLanka #Lanka4 #கடன்
Thamilini
2 years ago
கொடுத்த கடனை மீண்டும் கேட்டதால் நடந்த விபரீதம் - ஒருவர் படுகொலை!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (19.08) இடம்பெற்றுள்ளது. 

தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

குறித்த நபர் நாவின்ன பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு கடன் வழங்கியதாகவும், கொடுத்த கடனை திரும்பி பெறுவதற்காக வருகை தந்த பொழுது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. 

.கொலையை செய்த 60 வயதுடைய சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்லும் போது ஹோகந்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!