தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள்!
#SriLanka
#Hospital
Mayoorikka
2 years ago
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார்.
தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்