பிரான்ஸில் கட்டுமானப்பணியின் போது கடந்த உலகப்போர்க் குண்டு கண்டுபிடிப்பு
#France
#War
#Lanka4
#லங்கா4
#Bomb
#போர்
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

Colombes (Hauts-de-Seine ) நகரில் இரண்டாம் உலகப்போரினைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை இந்த வெடிகுண்டு rue Anatole-France வீதியில் இடம்பெற்று வரும் கட்டுமானப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து கட்டிடடப்பணியில் ஈடுபட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் இன்று பிற்பகல் எவ்வித குழப்பங்களும் ஒன்றி அமைதியான முறையில் வெடிகுண்டு அகற்றும் பணி இடம்பெபெற்றது.
எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தின் போது Paris மற்றும் Nanterre University வரையான L வழி தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது



