அவுஸ்திரேலிய கனவு காட்டி காதலனிடம் 18 லட்சம் மோசடி செய்த காதலி

#SriLanka #Arrest #Kilinochchi
Prathees
2 years ago
அவுஸ்திரேலிய கனவு காட்டி  காதலனிடம் 18 லட்சம் மோசடி செய்த காதலி

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி காதலனிடம் 18 இலட்சம் ரூபா பணத்தை ஏமாற்றிய யுவதியை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வசிக்கும் இந்த இளைஞன் தனது காதலியை பார்ப்பதற்காக அவ்வப்போது கிளிநொச்சிக்கு வந்துள்ளார்.

 அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்இ யுவதியின் உறவினர் ஒருவர்இ அவுஸ்திரேலியாவில் இருந்து அழைப்பதாகக் கூறி தனது காதலனிடம் தொலைபேசியைக் கொடுத்துள்ளார்.

 பல நாட்களாக தொலைபேசியில் பேசிய அவர்இ காதலனை அவுஸ்திரேலியா அழைத்து வரலாம் என்றும்இ தேவையான ஏற்பாடுகளுக்கு காதலரிடம் பணம் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 அதன்படி 18 இலட்சம் ரூபாவை தனது காதலியிடம் கொடுத்த இளைஞன், பணத்தை கொடுத்த நாளிலிருந்து காதலி பேசுவதை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் காதலன் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காதலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!