400 கோடி வசூலை கடந்து மாஸ் காட்டும் ஜெயிலர்!
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Director
#release
#2023
#Tamilnews
#Breakingnews
#Movies
#Movie
Mani
2 years ago

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்ததால், ரசிகர்கள் தியேட்டரில் படத்தை கொண்டாடினர்.
மேலும், 'ஜெயிலர்' படத்திற்கு முதல்வர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 6 நாட்களை கடந்த நிலையில் இதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.



