ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு நடத்திய தாக்குதலில் 2 போலீசார் பலி

#India #Death #Police #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews #Killed
Mani
2 years ago
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு நடத்திய தாக்குதலில் 2 போலீசார் பலி

ஜார்கண்ட் மாநிலம் கொல்கான் வனப்பகுதியில் முக்கிய மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதன் கமாண்டோ பிரிவு, ஜார்கண்ட் காவல்துறையின் ஜாகுவார் படை மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் படையுடன் இணைந்து மேற்கு சிங்பும் மாவட்ட வனப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.

நேற்று நள்ளிரவு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த சண்டையில் குண்டு காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர். இதனால், பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4