விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மனைவி, மகள் உயிருடன் உள்ளனரா? தொடரும் சர்ச்சைகள்

#SriLanka #Tamil People #Tamilnews #Diaspora
Lanka4
1 year ago
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மனைவி, மகள் உயிருடன் உள்ளனரா? தொடரும் சர்ச்சைகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இறப்பும் அவரது குடும்பத்தினரது இறப்பும் போராட்டம் முடிவுற்ற காலத்தில் இருந்தே ஒரு சர்ச்சையாக இருந்து வருகின்றது. 

 விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினை தாம் கொன்றுவிட்டதாக இராணுவம் ஒரு சடலத்தினை காட்டியது, அதனை முன்னாள் போரளியான கருணா அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். 

ஆனால் அந்த நேரத்தில் அவரது மனைவி பிள்ளைகளின் சடங்கள் எதுவும் காட்டப்படவில்லை, பின்னர் பாலச்சந்திரன் என்ற இளைய மகன் தடுப்பு காவலில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட தகவல் வெளியிடப்பட்டது. 

இதன் பின்னர் போர் முடிவுற்ற வேளையில் விடுதலிப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா மற்றும் மனைவி மதிவதனி இருவரும் இறந்து விட்டனர் என இராணுவம் கூறியிருந்தது, இதில் தலைவரின் மனைவி இறந்ததினை போராளிகள் சிலர் உறுதிப்படுத்தியிருந்தனர், ஆனால் மகள் துவாரகா இறந்ததினை அவர்களால் உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. 

 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என இந்தியாவில் இருந்து பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்திருந்தார், அதனையும் உறுதிப்படுத்த முடியாமல் அந்த செய்தியானது காற்றில் பறந்தது. 

 தற்போது மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது மனைவியின் சகோதரி தனது தங்கை மற்றும் அவரது மகள் துவாரகா உயிருடன் இருப்பதாகவும் அவர்களினை தான் பார்த்ததாகவும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது, 

 இதில் ஏது உண்மை இருக்குமோ என தலைவருடன் நெருங்கிய தொடர்புகளோடு இருந்தவர்களினை  lanka4 ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது 

அவர்கள் "போராளிகள் சிலரை உறுதிப்படுத்த பார்க்க அனுமதி கேட்ட போது மறுத்துவிட்டதாகவும் இதில் வேறு சில மர்மங்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்"

 விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறந்த பின்னரும் அவருக்கு ஒரு அஞ்சலி கூட செலுத்த முடியாத வகையில் இந்த பிரச்சினையை கிளறிக்கொண்டு இருப்பதே சிலரின் வேலையாக இருக்கின்றது. 

இதனை தமிழ் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!