சீனாவின் மற்றுமோர் கப்பலும் இலங்கை வரவுள்ளதாக தகவல்!

#India #SriLanka #China #Lanka4
Thamilini
2 years ago
சீனாவின் மற்றுமோர் கப்பலும் இலங்கை வரவுள்ளதாக தகவல்!

சீனாவின் மற்றுமொரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைய தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஷி யான் 6 என்ற ஆராய்ச்சி கப்பலே இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும் இந்த கப்பலின் வருகைக்கும் இந்திய இராஜதந்திர திணைக்களங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் எனவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 இந்த கப்பல் இலங்கையுடன் இணைந்து கடல் பயணத்தில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் மூலோபாய அபிலாஷைகள் குறித்து கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்திருந்தார். 

இதனையடுத்தே இலங்கைக்கு சீனாவின் ஆய்வுக்கப்பல்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆககே இது குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!