கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி விமான நிலையத்தில் கைது!
#India
#world_news
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த கருப்பையா என்ற பயணியை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
சுற்றுலா விசாவில், கத்தார் சென்றவர் அங்கு சட்டவிரோதமாக சில ஆண்டுகள் தங்கி இருந்து விட்டு, போலி பாஸ்போர்ட்டில் இந்தியா திரும்பியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேல் நடவடிக்கைக்காக அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.



