ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

#India #Lanka4 #T20 #Cricket #Zimbabwe #L4
Prasu
1 hour ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3வதுT 20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்தவகையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், வைபவ் சூர்யவன்ஷி 81 ஓட்டங்களும் இஷான் கிஷன் 29 ஓட்டங்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து 193 என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஜிம்பாப்வே அணி சார்பில், ரியான் பர்ல் 54 ஓட்டங்களும் மேதேவேரே 28 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம் இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4