'கருமேகங்கள் கலைகின்றன' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#Director
#release
#2023
#Movies
#Movie
Mani
2 years ago

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இதில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி இப்படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளனர்.



