வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வர்த்தமானியை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இதன்மூலம்  தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், தற்போதுள்ள அந்நியச் செலாவணி கையிருப்புடன் ஒப்பிடுகையில் மற்ற வாகனங்களின் இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!