பதினான்கு வயது மகளை பணத்திற்காக விற்ற தாய் விளக்கமறியலில்

#SriLanka #Court Order #Sexual Abuse
Prathees
2 years ago
பதினான்கு வயது மகளை பணத்திற்காக விற்ற தாய் விளக்கமறியலில்

விபச்சாரத்திற்காக தனது பதினான்கு வயது மகளை பணத்திற்காக விற்ற தாயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர நேற்று (11) உத்தரவிட்டுள்ளார்.

 சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்களும் நேற்று 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 மினுவாங்கொடை மற்றும் நில்பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவரும், 42 வயதான பண்டார கனேகொட ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 52 வயதான சந்தேக நபர் தினசரி கூலி வேலை செய்பவர் எனவும், 42 வயதான சந்தேக நபர் டயர் கடை ஒன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 நான்கு பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய சந்தேகநபர் மற்றும் சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் உள்ள சமூக நோய்கள் தொடர்பான விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தி சமூக நோய்கள் தொடர்பான அறிக்கையை பெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் நான்கு பிள்ளைகளின் தாயான சந்தேகநபர் தனது வீட்டிற்கு ஆட்களை வரவழைத்து ஒருவரிடம் இருந்து தலா 2000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பதில் நீதவான் அதுல குணசேகர பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!