நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலமானார்
#Cinema
#Death
#Actor
Prasu
2 years ago

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலமானார். தமிழ் திரையுலகில் 1978ல் வில்லன் நடிகராக அறிமுகமானவர் சத்யராஜ். பின்னர் கதாநாயகனாக உயர்ந்த சத்யராஜ் சில ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சத்யராஜின் தாயார் பெயர் நாதாம்பாள் (94). இவர் கோவையில் வசித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது.
நாதாம்பாளுக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். இவருக்கு கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
தற்போது சத்யராஜ் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில், தாயாரின் மறைவு குறித்து அறிந்து கோவைக்கு விரைந்துள்ளார்.



