தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் “திறன்மிகு தொழில் முனைவோர்” நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு.

#SriLanka #Kilinochchi #Lanka4 #இலங்கை #லங்கா4
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின்  “திறன்மிகு தொழில் முனைவோர்”  நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “திறன்மிகு தொழில் முனைவோர்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுப்பு.

 தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பிரகாரம் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “திறன்மிகு தொழில் முனைவோர்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் நாடளாவியரீதியில் நடைபெற்று வருகிறது. 

 அதன்பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான திறன்மிகு தொழில் முனைவோருக்கான நிகழ்வானது நேற்றையதினம் (09) கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

 உற்பத்தித்திறன் கருவிகள் மற்றும் நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை தொழில் முனைவோரின் உற்பத்தித்திறன், தரம், இலாபம் மற்றும் அதன் வளர்ச்சியை அதிகரிக்க செய்தலை நோக்கமாக கொண்டே இந் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு கருத்துரையினை வழங்கியிருந்தார். மேலும் இந் நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பாளர், வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளர், தேசிய உற்பத்தித்திறன் செயலக ஒருங்கிணைப்பாளர்,மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலக உத்தியோகத்தர், தேசிய உற்பத்தித்திறன் செயலக கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளர், தேசிய உற்பத்தித்திறன் செயலக ஒருங்கிணைப்பாளர்,மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலக உத்தியோகத்தர், தேசிய உற்பத்தித்திறன் செயலக கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!