இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (11.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
மதுஷங்க திஸாநாயக்க, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அமைப்பு முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும், அவுஸ்திரேலியாவின் கர்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்பில் முதுகலை பட்டமும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.