பதுளை பொது வைத்தியசாலைக்கான மின்சாரம் துண்டிப்பு!
#SriLanka
#Hospital
#Badulla
#Lanka4
Kanimoli
2 years ago
பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு முழுமையாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.