கண்டோஸ் சொக்லேட்டுகள் தொடர்பில் விளக்கம்!
கண்டோஸ் சொ க்லேட்டுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான விளம்பரங்கள் குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்து வருகிறது.
தமது நிறுவனத் தயாரிப்பு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தாம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக “ கன்டோஸ்“ சொக்லேட்டின் தயாரிப்பு நிறுவனமான சிலோன் சொக்லேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தங்கள் வர்த்தக நாமத்தினை நிலைநிறுத்துவதற்கும் அதை உறுதியாகப் பாதுகாப்பதற்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறித்த சம்பவம் மூலம் உங்களுக்கு எதாவது அசௌகரியம் ஏற்பட்டிருப்பின் அதற்காக எமது மனவருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது நிறுவனத்தின் உற்பத்திகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், மஹியங்கனை பகுதியில் உள்ள சொக்லேட் பாரில் மனித விரலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.