அப்படியானால் நான் யார்? ஜனாதிபதிக்கு எழுந்த சந்தேகம்
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றியதன் பின்னர், உறுப்பினர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
அக்கேள்விகளுக்கு ஜனாதிபதியும் பதிலளித்தார். இந்நிலையில், தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தயாரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.
அந்த சவாலுக்கு பதிலெதனையும் அளிக்காத ஜனாதிபதி, அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான் தயாராகவுள்ளேன், தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை நான் அறிந்துள்ளேன்.
நீங்கள் என்னை சிங்கள இனவாதி என்று குற்றம்சாட்டுகின்றீர்கள் ஆனால் அத்துரலியே தேரர் எம்.பி. என்னை தமிழ் ஆதரவாளர் என்கிறார், அப்படியானால் நான் யார்? என கேள்வி எழுப்பினார்.