ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்!
#India
#Cinema
#Actor
#TamilCinema
#release
#trailer
#Movie
Mani
2 years ago

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கௌரி, மிர்சி விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, 'அடியே' டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இன்று மாலை 4 மணிக்கு டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.



