நாமல் ராஜபக்சவின் திருமண மின்கட்டணம் குறித்து வெளிவந்த தகவல்

#SriLanka #wedding #Namal Rajapaksha #srilankan politics
Kanimoli
2 years ago
நாமல் ராஜபக்சவின் திருமண மின்கட்டணம் குறித்து வெளிவந்த தகவல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மின்கட்டணம் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை அறிவிக்கவில்லை எனவும் நிலுவை கட்டணம் ஏதும் இருக்குமாயின் அதை மின்சார சபை அறிவித்தால் கட்டணம் செலுத்தலாம். இந்த விவகாரத்தை ஒருதரப்பினர் தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ‘திருமண விழாவுக்கு பயன்படுத்திய மின்சாரத்துக்கு இதுவரை கட்டணம் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபை இதுவரை அறிவிக்கவில்லை. 

மின்சார நிலுவை தொகை ஏதும் இருப்பதாக மின்சார சபை அறிவித்தால் அதை செலுத்த தயார்’ என குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்ற விவகாரம் தற்போது அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!