ஹாலிவுட் படத்தில் ஆலியா பட் நடித்த புகைப்படங்கள் வெளியீடு
#India
#Cinema
#Actress
#TamilCinema
#release
#Movie
Mani
1 year ago

கடந்த ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதில் இருந்தே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவர் சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்தது பாராட்டு குவிந்து வருகிறது.
ஆலியா பட் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். டாம் ஹார்பெர் இயக்கும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' என்ற ஆக்ஷன் படத்தில் கால் கடோட், ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து ஆலியா பட் நடித்து முடித்துள்ளார்.
படத்தை வரும் 11ஆம் தேதி ஒடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ஆலியா பட் புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.



