மொரொக்கோவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழப்பு

#Death #Accident #Bus #Rescue
Prasu
2 years ago
மொரொக்கோவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல ஏழை குடிமக்கள் கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினிபஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.

 மொராக்கோவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை இறப்புகள் மற்றும் 12,000 காயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 10 இறப்புகள் பதிவாகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4