பிரான்ஸ் தபாலகமொன்றில் 266,000 யூரோக்கள் கொள்ளை!
#France
#Robbery
#Lanka4
#லங்கா4
#கொள்ளை
#Office
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago

பிரெஞ் தபாலகம் ஒன்றிற்குள்ளிருந்து €266,000 யூரோக்கள் பணத்தைக் சிலர் கொள்ளையிட்டுள்ளனர்.
Villeneuve-d'Ascq (Hauts-de-France) நகரில் உள்ள தபாகலம் ஒன்று நேற்று வியாழக்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் கூரையை உடைத்துக்கொண்டு உள் இறங்கிய கொள்ளையர்கள், அங்கு சேமிப்பகத்தில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இரண்டு தொடக்கம் நான்கு வரையான கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருக்காலம் என காவல்துறையினர் விசாரணைகள் மூலம் தெரிவித்தனர். மேலும்,அங்கிருந்த €266,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..



